ஆசை

My blogs

About me

Gender Male
Industry Publishing
Occupation Lexicographer, Journalist
Location Chennai, Tamil Nadu, India
Introduction இயற்பெயர் ஆசைத்தம்பி. 1979-ல் மன்னார்குடியில் பிறந்தேன். படித்தது M.A. M.Phil. க்ரியா அகராதியில் (2008) துணையாசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். 2013-லிருந்து 2022-வரை ‘இந்து தமிழ்’ நடுப்பக்க அணியில் பணி. 11 வயதிலிருந்து கவிதை எழுதிவருகிறேன். எனது கவிதைத் தொகுப்புகள்: ‘சித்து’ (2006), ‘கொண்டலாத்தி’ (2010, க்ரியா), ‘அண்டங்காளி’ (2021), ‘குவாண்டம் செல்ஃபி’ (2021, டிஸ்கவரி). மொழிபெயர்ப்புகள்: பேரா. தங்க. ஜெயராமனுடன் இணைந்து ஒமர் கய்யாமின் 'ருபாயியத்' (2010, க்ரியா), திக் நியட் ஹானின் ‘அமைதி என்பது நாமே’ (2018, க்ரியா). ப. ஜெகநாதனுடன் இணைந்து 'பறவைகள்' (2013, க்ரியா) என்ற நூலை வெளியிட்டிருக்கிறேன். எனது ‘என்றும் காந்தி’ (2019) நூல் ‘இந்து தமிழ் திசை’யால் வெளியிடப்பட்டது. ‘இந்த பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்’ (2022, டிஸ்கவரி) என்ற தலைப்பில் இலக்கியக் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய, பபாசியின் கவிதைக்கான ‘கலைஞர் பொற்கிழி விருது-2022’. சென்னை லிட்டரெரி ஃபெஸ்டிவல் அமைப்பின் ‘Emerging Literary Icon' விருது (2014). திருமணம் 2011-ல். மனைவி: சிந்து. மகன்கள்: மகிழ் ஆதன் (2012), நீரன் (2019). மகிழ் ஆதன் ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’, ‘காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியிருக்கிறான். மின்னஞ்சல்: asaidp@gmail.com